Books

Udayanakumara Kaviyam

Author : Dr. Rama. MALARVIZHI MANGAYARKARASI

Publication Date: Wed Mar 11 2020 15:59:26 GMT+0530 (India Standard Time)

Category: Tamil Literature

Sub Category:

Author: Dr. Rama. MALARVIZHI MANGAYARKARASI

Download: 85

தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஐஞ்சிறுகாப்பியங்களில் முதன்மை காப்பியமாகிய உதயணகுமார காவியத்தை நாடக வடிவில் வழங்கியதில் தனி முத்திரை பதித்துள்ளார் மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இராம. மலர்விழிமங்கையர்க்கரசி. இன்றைக்கு காவிய நூல்கள் வெளியிடுவது என்பது அரிதான விசயமாகிவிட்டது. பொருள் மாறாமல் எளிமையான சொற்களில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. காலத்திற்கு ஏற்ப காவியங்களை எளிய சொற்களால் அமைத்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அச்சாக கொடுப்பது நூலாசிரியர்களின் சிறந்த பணியாகும். அந்தப் பணியினை நூலாசிரியர், உதயணகுமார காவியத்தில் மிகத்தெளிவாக கையாண்டு, வாசிப்பை எளிமையாக்கியுள்ளார் கரு மாறாமல். ஐஞ்சிறுகாப்பியங்களில் முதன்மையான உதயணகுமார காவியத்தை நாடக வடிவத்தில் படைத்துள்ள பாங்கு திரைக்கதை எழுத முனைவோருக்கும், இன்றைய இளைய சமுதாயத்திற்கும் ஒரு சிறந்த பயிற்று நூலாக அமைந்துள்ளது என்பது வெளிப்படை. இதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாட நூலாக வழங்கினால் மாணவர் சமுதாயம் காப்பியங்களை எளிய நாடக நடைமுறையில் படித்து பயன்பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Download
db/padippagam_malar_vizhi (1).jpg

Dr. Rama. MALARVIZHI MANGAYARKARASI

Author Since: 1964-03-05

20 ஆண்டுகளாக மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி, தற்போது துறைத்தலைவராகத் திகழும் தமிழிறிஞர் இராம. மலர்விழிமங்கையர்க்கரசி அவர்களின் தந்தையார் புலவர் சுப. ராமச்சந்திரன் (திருவள்ளுவர் கழகத் துணைத்தலைவர்), தாய் மீனாட்சி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), கணவர் ஆதிராமசுப்பு (மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்). நூலாசிரியர் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து பின்பு கணபதி சீதையம்மாள் மகளிர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். மேலும் இவர், ஒப்பியல் சமயநோக்கில் திருவருட்பா, அருட்பாவும் அருள் நூல்களும், மங்கையரின் மனம் மயக்கும் மருதாணி, சீவகசிந்தாமணி (நாடக வடிவில்), வளையாபதி (நாடக வடிவில்) எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் கல்லூரியில் பாடபுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 24க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஐஞ்சிறுகாப்பியங்கள், சீவகசிந்தாமணி, வளையாபதி என இவர் எழுதிய ஏழு காவிய நாடகங்களையும் மதுரை வானொலி ஒலிபரப்பியுள்ளது. பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (மலேசியா) சார்பில் “காப்பியத் தாய்” விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

View All Books

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey