Books

பெண்மையைப் போற்றுவோம்

Author : Dr. Rama. MALARVIZHI MANGAYARKARASI

Publication Date: Fri Aug 07 2020 17:32:18 GMT+0530 (India Standard Time)

Category: Tamil Literature

Sub Category: Epic - Drama

Author: Dr. Rama. MALARVIZHI MANGAYARKARASI

Download: 36

பெண்மையைப் போற்றுவோமா? வேண்டாமா? விவாதம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் தன் கையை குரலையும் ஒருசேர உயர்த்தியவன் நம் முண்டாசுக் கவிஞன் பாரதியே! அவன் "பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா" என என உரக்கச் சொல்லவில்லையெனில் நம் தமிழ் குலப் பெண்களை வீடும் நாடும் கொண்டாடியிருக்குமா என்பது ஐயப்பாடுதான். "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே" என்று தெளிவாகக் குரலெடுத்து "அறிவிலிகள் வீட்டுக்குள்ளே உங்கள் வீட்டுப் பெண்களுக்கு சுதந்திரம் நீங்கள் தராமல் நம் நாட்டினை அந்நிய ஏகாதிபத்தியம் மட்டும் எப்படி விடுதலை செய்யும் என்று நம்புகிறீர்கள்?" என தமிழ்ச் சாதியின் செவிட்டில் ஓங்கி அறைந்தான். அதுவரை ஓதப்பட்டு அடைத்துப் போய் இருந்த ஆணாதிக்க சிந்தனை கிழிந்து பெண் பற்றிய நியாயமான கருத்துகள் செவிப்பறைக்குள் எதிரொலிக்கத் தொடங்கின.

Download
db/padippagam_malar_vizhi (1).jpg

Dr. Rama. MALARVIZHI MANGAYARKARASI

Author Since: 1964-03-05

20 ஆண்டுகளாக மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி, தற்போது துறைத்தலைவராகத் திகழும் தமிழிறிஞர் இராம. மலர்விழிமங்கையர்க்கரசி அவர்களின் தந்தையார் புலவர் சுப. ராமச்சந்திரன் (திருவள்ளுவர் கழகத் துணைத்தலைவர்), தாய் மீனாட்சி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), கணவர் ஆதிராமசுப்பு (மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்). நூலாசிரியர் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து பின்பு கணபதி சீதையம்மாள் மகளிர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். மேலும் இவர், ஒப்பியல் சமயநோக்கில் திருவருட்பா, அருட்பாவும் அருள் நூல்களும், மங்கையரின் மனம் மயக்கும் மருதாணி, சீவகசிந்தாமணி (நாடக வடிவில்), வளையாபதி (நாடக வடிவில்) எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் கல்லூரியில் பாடபுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 24க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஐஞ்சிறுகாப்பியங்கள், சீவகசிந்தாமணி, வளையாபதி என இவர் எழுதிய ஏழு காவிய நாடகங்களையும் மதுரை வானொலி ஒலிபரப்பியுள்ளது. பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (மலேசியா) சார்பில் “காப்பியத் தாய்” விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.

View All Books

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey Designed by Judah Web Solutions