Books

இலக்கியத்தில் மதிப்புகள்

Author : முனைவர் ந. தமிழ்மொழி

Publication Date: Fri Aug 07 2020 17:08:43 GMT+0530 (India Standard Time)

Category: இலக்கியம்

Sub Category: திறனாய்வு

Author: முனைவர் ந. தமிழ்மொழி

Download: 2

புத்தக மதிப்புரை :நூலின் பெயர் : இலக்கியத்தில் மதிப்புகள் . காப்பியங்கள் குறித்த எனது நூலில் பன்முகப் பார்வையுடன் எனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளேன். மானுட மதிப்புகள் என்று கூறும் போது மானுடம் போற்றுவதும், பழிப்பதும் வழக்கம் என்ற கருத்தை சுட்டிக்காட்டியுள்ளேன். காப்பியங்களில் வன்முறை என்ற சொல் விவாதத்தை உருவாக்கும் சொல்லாக அமையும் என்பதால் அரசியற் பிழை. தனி மனித பலகீனங்கள், பெண்ணடிமை , சமயப் பூசல் எனக் காப்பியங்களில் உள்ள இடர்பாடுகளை உற்று நோக்கினேன். மதுரை நகரின் வளம் எனும் கட்டுரையில் சிலப்பதிகாரத்தில் மதுரை பெறுமிடம் குறித்தும், மணிமேகலைக் காப்பியத்தைக் கற்பித்தல் எனும் தலைப்பில் எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையைக் கூறியுள்ளேன். மணிமேகலையில் அறிவியல் எனும் தலைப்பில் அறிவியல் பெயர்கள் குறித்தும், பரத்தைப் பேசினாள் பகுதியில் மாதவியின் பண்பு நலன்களும் விவாதித்துள்ளேன். இறுதியாக முத்தமிழ் நாட்டுப்புறக் கலைக் குழு, மூன்றாம் உலகப்போரில் மனிதப் பண்புகள் பெறுமிடம் குறித்தும் விவாதித்துள்ளேன். இவ்வாறாக இலக்கியத்தில் மதிப்புகள் எனும் நூல் உருவானது.

Download
db/padippagam_authors_tamil_mozhi.jpg

முனைவர் ந. தமிழ்மொழி

Author Since: 1983-05-20

முனைவர் ந.தமிழ் மொழி உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை. இலக்கியத்தில் மதிப்புகள் எனும் நூலானது மதிப்புகள் (Values) குறித்த எனது ஆய்வுக் களங்களில் உருவானது. 20க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். காப்பியங்களில் அறமும் அரசியலும் என்பது என் முதல் நூல். 3வது நூல் இரட்டைக் காப்பியங்களில் அவலச் சுவை ஆகும்.சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, சாதனைப் பெண்கள் 2020. டாக்டர் .இராத கிருஷ்ணன் விருது, கவிச் செம்மல் விருதுகளைப் பெற்றுள்ளேன். இலக்கியங்களின் தொன்மமும் மதிப்புகளுமே எனது ஆய்வின் முக்கிய பங்கு என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

View All Books

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey