Books

Chariyai in Tamil Grammar

Author : Senthan Kaja

Publication Date: Tue Mar 10 2020 18:43:27 GMT+0530 (India Standard Time)

Category: Tamil

Sub Category: Grammar

Author: Senthan Kaja

Download: 93

தமிழர்களுக்கு மத்தியிலும் தமிழ் மாணவர்களுக்கு மத்தியிலும் இலக்கணம் பயில்வதும் அதுபற்றி உரை நிகழ்த்துவதும் நூல்கள் எழுதுவதும் அருகிவரும் சூழலில் இலக்கணத்தில் ஆய்வு செய்து மாணவர்களுக்குக் கடுமையான இலக்கணத்தினை எளிமைப்படுத்தித் தற்கால நடைமுறை சான்றுகளோடு மாணவர்கள் மனம் கொள்ளும் வகையில் ஆய்வு நோக்கோடு கற்றுத்தரும் பேராசிரியர் முனைவர் மு. கற்பகம் இலக்கணத்தில் ஒரு கூறான சாரியையினை மையப் பொருளாகக் கொண்டு அதனை ஒன்பது இலக்கண நூல்களோடு ஒப்பிட்டு நூலாக்கம் செய்து வெளியிடுவது இலக்கண உலகம் புத்துயிர் பெற்று விளங்குதனைக் காட்டுகிறது. இந்நூல் இலக்கணத்தில் ஆய்வு செய்யும் இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆய்வாளர்களுக்கும் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் இந்நூல் பயனுள்ள நூலாக அமையும்.

Download
db/9.jpg

Senthan Kaja

Author Since: 1978-09-18

12 ஆண்டுகளாக மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறையில் பணியாற்றிவரும் முனைவர் மு. கற்பகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், திண்டுக்கல் எம்.வி.எம் மகளிர் கல்லூரி, மதுரை பாத்திமா கல்லூரி மற்றும் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரிகளில் பணியாற்றியவர். இவர் 'தமிழில் சாரியைகள்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் தமிழ் இலக்கணங்களில் சாரியைகள், இலக்கண மலர்கள், பந்தயக்குதிரை என்ற நூல்களை எழுதியுள்ளார். இவை தவிர 50 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள்எழுதியுள்ளார். மதுரை வானொலி நிலையத்தில் பெண்மையின் மேன்மை, பழந்தமிழரின் மாண்புகள், சான்றோர் சிந்தனை குறித்தத் தொடர் பொழிவுகளும் கீழடி குறித்த உரைக்கோவையும் வழங்கியுள்ளார்.

View All Books

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey