Blog

படிப்பின் நோக்கம்

Author : Padippagam

Publication Date: 2020-01-01

அறிவு என்பது அறிந்து கொள்வது அல்ல. அறிவு என்பதன் ஆகச் சிறந்த பொருள் அறிந்து கொண்டே இருப்பது என்பது தான் படித்து தெரிந்து கொள்வது மனிதனை மேம்படுத்தும் கூர்ந்து சிந்திக்க வைக்கும் வழிகளில் ஒன்று. சாதாரண அர்த்தம் தரும் செய்திகளுக்கு கூட ஆழ்ந்த அர்த்தத்தைத் தருவது எழுத்துக்கள் மட்டுமே... ஆனால் விஞ்ஞானத்தில் மிதமிஞ்சிப் போன இந்த தலைமுறை எல்லாவற்றையும் வீடியோவாகத் தான் பார்க்க விரும்புகிறது, பார்போற்றும் படைப்புகளாலேயே தமிழும், தமிழகமும் தனித்து நிற்கிறது. தமிழரின் அறிவு திறனுக்கு எல்லையே இல்லை மதம் தாண்டி, இனம் தாண்டி, படிப்பின் அவசியத்தை அவதானிக்கிறது விஞ்ஞானம். எண்ணியலையும் எழுத்தியலையும் உடலின் உறுப்பாகவே பாவித்தனர். "எண்ணென்ப ஏன எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" கல்வி அறிவின் அவசியத்தையும் கல்லாதோரின் இழிவையும் எடுத்துச் சொல்லி உலகுக்கே பாடம் சொல்லி கொடுத்த மரபின் வாரிசு நாம். நம்மின் அறிவு தேடலை இன்றில் இருந்தாவது தொடர்வோம்.

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey