Dr. Rama. MALARVIZHI MANGAYARKARASI
& Author
20 ஆண்டுகளாக மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணியாற்றி, தற்போது துறைத்தலைவராகத் திகழும் தமிழிறிஞர் இராம. மலர்விழிமங்கையர்க்கரசி அவர்களின் தந்தையார் புலவர் சுப. ராமச்சந்திரன் (திருவள்ளுவர் கழகத் துணைத்தலைவர்), தாய் மீனாட்சி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), கணவர் ஆதிராமசுப்பு (மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்). நூலாசிரியர் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து பின்பு கணபதி சீதையம்மாள் மகளிர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியவர். மேலும் இவர், ஒப்பியல் சமயநோக்கில் திருவருட்பா, அருட்பாவும் அருள் நூல்களும், மங்கையரின் மனம் மயக்கும் மருதாணி, சீவகசிந்தாமணி (நாடக வடிவில்), வளையாபதி (நாடக வடிவில்) எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்கள் கல்லூரியில் பாடபுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. இது தவிர 24க்கும் அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஐஞ்சிறுகாப்பியங்கள், சீவகசிந்தாமணி, வளையாபதி என இவர் எழுதிய ஏழு காவிய நாடகங்களையும் மதுரை வானொலி ஒலிபரப்பியுள்ளது. பல்வேறு விருதுகள் பெற்றுள்ள இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் (மலேசியா) சார்பில் “காப்பியத் தாய்” விருதினை வழங்கி கௌரவித்துள்ளது.